Thursday, December 11, 2025 10:20 am
பாதுகாப்பான முறையில் மீண்டும் செயல்படக்கூடிய அனைத்து பாலர் பாடசாலைகளும், ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டு மையங்களும் டிசம்பர் 16 முதல் மீண்டும் திறக்கப்படும் என ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.
தற்போது செயல்படுவதற்கு பாதுகாப்பானதாகக் கருதப்படும் அனைத்து பாலர் பாடசாலைகள் மற்றும் குழந்தை பருவ மேம்பாட்டு மையங்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் திறக்கப்படும் என செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட அதிதீவிர வானிலை காரணமாக பாலர் பாடசாலைகள் மற்றும் குழந்தை பருவ மேம்பாட்டு மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

