Saturday, December 27, 2025 11:23 am
மின்னஞ்சல் முகவரியின் பெயரை மாற்றும் வாய்ப்பை கூகுள் தனது பயனர்களுக்கு வழங்கவுள்ளது.
இந்தப் புதிய அம்சம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் தற்போது பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் முகவரியைப் பாதிக்காமல் விரும்பிய பெயரை மாற்றிக்கொள்ள பயனர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இதன்மூலம் புதிய கணக்கை உருவாக்காமல், ஏற்கனவே உள்ள கணக்கில் உள்ள தகவல்களை மாற்றாமல் புதிய மின்னஞ்சல் பெயரைத் தேர்வுசெய்ய முடியும்.
பயனர்கள் தங்கள் தற்போதைய @gmail.com முகவரியை புதிய பெயருடன் கூடிய முகவரியாக மாற்றலாம். இது ‘@gmail.com’ உடன் முடிவடையும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தும் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்படுகிறது. தனிப்பயன் டொமைன்கள், பணி மற்றும் பாடசாலை முகவரிகளுக்குப் பயன்படுத்தப்படும் கணக்குகளின் பெயர்களை இதன் கீழ் மாற்ற முடியாது.
@gmail பயனர்பெயர் மாற்றப்பட்டவுடன், 12 மாத காலத்திற்குப் பிறகுதான் அதை மீண்டும் மாற்ற முடியும். இந்த காலகட்டத்தில், தேவைப்பட்டால் மட்டுமே முந்தைய முகவரிக்குத் திரும்ப முடியும் என கூறப்படுகிறது.

