Monday, December 15, 2025 3:31 pm
பருத்தித்துறை நகரசபை 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவிசாளர் வின்சன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் சபை அமர்வு இன்று காலை நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் 2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக ஏழு வாக்குகள் அளிக்கப்பட்டன. மேலதிக ஒரு வாக்கால் பருத்திதுறை நகரசபை 2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பேரவையின் 5 உறுப்பினர்களும், ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் இருவரும், சுயேட்சை (ஊசி) உறுப்பினர் ஒருவரும் வாக்களித்திருந்தனர்.
தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர்.
மரக்கறி சந்தை குத்தகை மற்றும் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலைய குத்தகை விடயம் தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு கோரப்பட்ட போது தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்த நிலையில் சபையில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

