Wednesday, December 17, 2025 3:25 pm
இந்தியன் பிறீமியர் லீக்கின் 2026 ஏலம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில் மதீஷ பத்திரணவை 18 கோடி இந்திய ரூபாய்களுக்கு கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணி வாங்கியுள்ளது.
இதேவேளை பதும் நிஸங்கவை 4 கோடி இந்திய ரூபாய்களுக்கு டெல்லி கப்பிட்டல்ஸ் வாங்கியுள்ளது.
புதுமுகவீரர்களான இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான விக்கெட் காப்பாளர் கார்த்திக் ஷர்மா மற்றும் 20 வயதான இடதுகை சுழற்பந்துவீச்சாளரான பிரஷாந்த் வீரை தலா 14.2 கோடி இந்திய ரூபாய்க்கு சென்னை சுப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.
5.2 கோடி இந்திய ரூபாய்களுக்கு வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரரான மன்கெஷ் யாதவ்வை றோயல் சலஞ்சர்ஸ் வாங்கியுள்ளது.
இதேவேளை மகேஷ் தீக்ஷன, தசுன் ஷானக, ஜொனி பெயார்ஸ்டோ, ஜேமி ஸ்மித், ஸ்பென்சன் ஜோன்சன், மிஷெல் பிறேஸ்வெல், ஜேக் பிறேஸர் மக்குர்க், ஜஹை றிச்சர்ட்சன், அல்ஸாரி ஜோசப், டரைல் மிற்செல், கரண் ஷர்மா, விஜயர் ஷங்கர், மஹிபால் லொம்ரோர், முஜீப் உர் ரஹ்மான், பஸல்ஹக் பரூக்கி, ரஹ்மனுல்லா குர்பாஸ், டெவொன் கொன்வே, ஆகாஷ் மத்வால் ஆகியோர் ஏலமெடுக்கப்படவில்லை.


