Friday, January 9, 2026 2:14 pm
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து சென்சார் சிக்கல்களிலிருந்தும் படம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 ஆம் திகதி வெளியிட்டுத் திகதிக்கு முன்னதாக இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) திரைப்படத்துக்கு U/A சான்றிதழை வழங்கியுள்ளது.
படத்தின் சான்றளிக்கப்பட்ட ஓட்ட நேரம் இரண்டு மணி, 42 நிமிடங்கள் மற்றும் 43 வினாடிகள் ஆகும்.
இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதால் ஏற்கனவே திட்டமிட்டபடி பராசக்தி திரைப்படம் நாளை சனிக்கிழமை வெளியாகும் என படத்தின் அதிகாரப்பூர்வ தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸும் உறுதிபடுத்தியுள்ளது.
பராசக்தி திரைப்படம் 1960களில் சென்னையை உலுக்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை சித்தரிக்கிறது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷின் 100 ஆவது வெளியீடையும் கொண்டாடுகிறது.

