Wednesday, December 24, 2025 11:23 am
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் குறித்த நபர் வீதியை கடக்க முற்பட்டவேளை, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது ரயில் வீதி காவலாளி இப்பகுதியில் காணப்படவில்லை எனவும், இதுபோன்ற சம்பவங்கள் குறித்த பகுதியில் இரண்டு தடவைகள் இடம்பெற்று உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவிபத்தில் ஆனைப்பந்தி – யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய இரத்தினராசா கிருஷ்ணமோகன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

