2025ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாகப் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோயல் மோகிர் & பீட்டர் ஹோவிட் ஆகியோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். பிலிப் அகியோன் பிரிட்டனைச் சேர்ந்தவர் ஆவார்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதை இந்த மூவரும் விளக்கியதற்காக இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நிலையான வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைகளைக் கண்டறிந்ததற்காக ஜோயல் மோகிருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. “கிரியேட்டிவ் டிஸ்ட்ரக்ஷன்” எனப்படும் ஆக்கப்பூர்வ அழிவு மூலம் நிலையான வளர்ச்சி எப்படி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்ததற்காக பிலிப் அக்யான்,பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.