Wednesday, December 17, 2025 1:59 pm
பிரான்ஸில் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் நிரந்தர குடியுரிமை கோரும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடியுரிமை கோரும் அனைவரும் 45 நிமிடங்கள் கொண்ட இலத்திரனியல் பரீட்சையில் தோற்றி 80 வீதமான புள்ளிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகள் செல்லுபடியாகும் குடியிருப்பு அட்டை மற்றும் நிரந்தர குடியிருப்பு அனுமதி கோருபவருக்கு இந்த பரீட்சை கட்டாயமானதாகும்.
பிரான்ஸ் குடியரசின் மதிப்புகள், உரிமைகள் மற்றும் கடமைகள், அரசியல் அமைப்பு, வரலாறு, பண்பாடு மற்றும் சமூக வாழ்க்கை போன்ற ஐந்து தலைப்புகளில் 40 கேள்விகள் கேட்கப்படும். நிரந்தர குடியுரிமைக்காக B2 மொழித் தரம் பெற்றிருப்பது அவசியமாகும்.
ஏற்கனவே குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் பிரான்ஸில் அகதி அந்தஸ்து கோரியுள்ளவர்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

