Monday, December 8, 2025 2:49 pm
டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் பெரியகுளம் கிராம மக்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் வழங்கி வைக்கப்பட்டது.

பெரியகுளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் அர்த்தனனது ஒழுங்குபடுத்தலில் கனடாவாழ் மாவிட்டபுரம் மக்களின் நிதிப் பங்களிப்பில், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர் உதயசங்கரின் நெறிப்படுத்தலில் இந்த நிவாரணப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உதயசங்கர், சமுர்த்தி உத்தியோகத்தர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

