Saturday, November 8, 2025 12:08 pm
மூன்று குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் ஒருவர் மரணமான செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாழ்ப்பாணம் வதிரிப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய யோகராசா மயூரதி, என்பவர் 20 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாது காணப்பட்டார். இந்நிலையில் பல சிகிச்சைகளுக்கு பின், கடந்த மாதம் 7ம் திகதி யோகராசா மயூரதி யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில், 3 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
குழந்தை பிறந்த காலப்பகுதியிலிருந்து நேற்று வரையான காலப்பகுதியில், இரண்டு நாட்களே குறித்த பெண் கண் விழித்து பார்த்துள்ளதாகவும், ஏனைய நாட்கள் மயக்கமுற்ற நிலையிலும் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை 3 பிள்ளைகளை பிரசவித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனை அறிக்கை இதுவரை வெளிவரவில்லை.
குழந்தைகளை பிரசவித்த இளம் தாய்மார் மரணமாகும் விடயம், யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் தொடந்து நடைபெற்று வரும் நிலையில், 20 வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லாது அண்மையில் 3 பிள்ளைகளை பிரசவித்தும், குழந்தைகளை காணாது மயூரதியின் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியதுடன் மருத்துவத்துறை சார்ந்த பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

