Wednesday, December 31, 2025 2:33 pm
சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் வேலணை அராலிச் சந்திப் பகுதியில் ஊர்காவற்றுறை பொலிசாரால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்ட 35 கிலோ மாட்டு இறைச்சியுடன் மோட்டார் சைக்கிளில் மீன் வியாபாரி போன்று வந்தவரை இன்று அதிகாலை 5.30 மணியளவில் புங்குடுதீவு பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புங்குடுதீவு மடத்துவெளியைச் சேர்ந்த குறித்த நபர் மீன் பெட்டிக்குள் மறைத்து வைத்து தலா ஒரு கிலோ நிறைகொண்ட 35 இறைச்சிப் பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

