Friday, October 31, 2025 10:36 am
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூலகத்தின் மேற்கூரையில், மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மகசின்கள், அதற்குரிய 59 ரவைகள், 5 அடி நீளமான வயர் நேற்று வியாழக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக நிர்வாகத்தினரால், இது குறித்து கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினுள் நேற்று இரவு முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அங்கு சென்ற கோப்பாய் பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் குறித்த பொருட்களை மீட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


