Tuesday, December 2, 2025 1:23 pm
தென் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் புயல்களால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழத்தவர்களுக்கு பிரித்தானிய அரச குடும்பம் சார்பில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகள் முழுவதும் பரவலான அழிவு ஏற்பட்டதை அறிந்து நானும் ராணி கமிலாவும் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். மக்களின் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை மிகுந்த வேதனை அளிக்கிறது.
“அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். வீடுகள் அழிக்கப்பட்ட பலருக்கும், காணாமல் போனவர்களின் செய்திக்காகக் காத்திருக்கும் அனைவருக்காகவும் பிராத்திக்கிறோம். ” துணிச்சல் மிக்க அவசரகால பணியாளர்கள் மற்றும் தொடர்ச்சியான மீட்பு முயற்சிகளின் போது அத்தியாவசிய உதவிகளை வழங்கும் அனைவரையும் பாராட்டுகிறோம்.

இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்களை நினைவில் கொண்டு நானும் மற்றும் ராணி கமிலாவும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் “உறுதியாக மனங்களில் வைத்திருக்கிறோம்” இந்த நாடுகளின் மக்களுக்கு வலிமையும் ஆறுதலும் கிடைக்க பிரார்த்தனைகள் செய்கிறோம் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

