Wednesday, December 3, 2025 12:53 pm
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேற்று செவ்வாய்கிழமை நேரில் சென்று சந்தித்தார்.

இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளும் வழங்கப்பட்டது.
இந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை வழங்கும் செயற்பாடு மலையக பிரதேச பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

