Tuesday, December 23, 2025 2:02 pm
இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் புகையிரத சேவைகள் முழுமையாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான ‘யாழ் தேவி’ புகையிரத சேவை நாளை புதன்கிழமை முதல் வழமை போல் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலை 6:40 க்குப் புறப்பட்டு பிற்பகல் 2:32 க்குக் காங்கேசன்துறை நிலையத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து காலை 10:30 க்குப் புறப்பட்டு மாலை 6:54 க்குக் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

