Thursday, February 5, 2026 10:55 am
சுற்றாடல் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் காரணமாக குறித்த திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அம்புலுவாவ பகுதியில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன, குறித்த திட்டத்தின் மூலம் எவ்வித சுற்றாடல் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்தார்.

