Thursday, February 5, 2026 2:11 pm
கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கடலில் வைத்து இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்தியக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது.
சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இக்குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் இந்தியா எப்போதும் மனிதாபிமான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருவதாகவும் உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் கடற்றொழிலாளர்களின் நலன் சார்ந்து இலங்கை அரசாங்கத்துடன் தாம் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு மதிப்பளித்து மனிதாபிமான ரீதியிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இந்தியத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

