Saturday, December 20, 2025 2:39 pm
அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான T20 கிரிக்கெட் போட்டியில் 30 ஓட்டங்களினால் இந்திய அணி வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரினை இந்தியா 3:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 231 ஓட்டங்களை எடுத்தது.
232 ஓட்டங்கள் என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
இந்திய அணி சார்பில் திலக் வர்மா 42 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 73 ஓட்டங்களையும், ஹர்த்திக் பாண்டியா 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ஹார்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டதுடன், தொடரின் நாயகனாக வருண் தேர்வு செய்யப்பட்டார்.

