Wednesday, February 18, 2026 11:50 am
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா, இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினராகி 75 ஆண்டுகள் நிறைவடைவதையும், இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவையும் ஒட்டியே இந்த விஜயம் அமைந்தது.
மத்திய வங்கி வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது ஜோர்ஜீயேவா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்தார்.
தற்போதைய நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் வழங்கப்பட்ட உறுதியான ஆதரவிற்கும், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கு உதவும் வகையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்ய தீவிரமாக ஒத்துழைத்தமைக்கும் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினருக்கு ஆளுநர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

