Friday, October 31, 2025 3:49 pm
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற் கூரை பகுதியில், ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்கள் இருக்கலாமென நம்பப்படும் நிலையில், முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரை பகுதியில் திருத்த வேலை நடைபெற்ற போது, நேற்று வியாழக்கிழமை இரண்டு மகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டன.
பல்கலைக்கழக நிர்வாகத்தினரால், கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த பொருட்கள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் இன்று வெள்ளிக்கிழமை காலை அகற்றப்பட்டது.
மீண்டும் கூரை பகுதியில் திருத்த வேலை இடம்பெற்ற போது, பொருட்கள் கைப்பற்றப்பட்ட பகுதிக்கு அருகில் ரி 56 ரக துப்பாக்கி, இரண்டு மகஸின், வயர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் சிலவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து மீண்டும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியை முழுமையாக சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


