Tuesday, December 9, 2025 12:25 pm
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறுவர்கள் சமூக, நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட தெரிவித்துள்ளார்.
அதிதீவிர வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் பணி மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

