Tuesday, December 23, 2025 10:44 am
இன்று செவ்வாய்கிழமை மட்டும் தங்கத்தின்விலை 8000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதால் இலங்கை தங்கச் சந்தையிலும் விலைகள் வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 8000 ரூபாயால் அதிகரித்து 352,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 325,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

