Friday, October 31, 2025 4:04 pm
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மொஹமட் அசாருதீன், தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை அமைச்சராக இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுள்ளார்.
ராஜ்பவனில் இன்று காலை நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் தெலங்கானா மாநிலத்தின், முதல் முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகின்றார்.
தெலங்கானா மாநிலத்தில் சுமார் 30% முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தபோதிலும், இதுவரை முஸ்லிம் பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இல்லாமல் இருந்தது.
அசாருதீன் 1984 முதல் 2000 வரையான காலப்பகுதியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்கள் மற்றும் 21 அரைச் சதங்களுடன் 6215 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 7 சதங்கள் மற்றும் 58 அரைச் சதங்களுடன் 9378 ஓட்டங்களையும் பெற்றுள்ள பெருமையை அசாருதீன் பெற்றுள்ளார்.


