Saturday, December 27, 2025 10:55 am
எலிக் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
துன்னாலை தெற்கு, வேம்படிப் பகுதியைச் சேர்ந்த 66 வயதான சிங்கராஜா சிவராஜசிங்கம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மூன்று நாட்கள் காய்ச்சல் காரணமாக கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்று மாலை உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார்.

