Thursday, December 18, 2025 4:24 pm
இலங்கையை தாக்கிய “டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்கள் ஊடாகக் கோர வேண்டாம் எனவும், அதன் ஊடாக அறிவிப்புகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனர்த்த நிலைமையின் காரணமாக பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை இழந்த சில சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் தொடர்பான தகவல்களை சட்டப்பூர்வமாக உரிய அரச நிறுவனங்கள் ஊடாக அல்லது பொலிஸார் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சில கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக இந்த சிறு பிள்ளைகளின் விபரங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக விசேடமாக இலங்கை பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது எனவும், சிறுவர்கள் தொடர்பில் தகவல்தேவைப்படுவோர் அருகிலுள்ள பிரதேச செயலகம் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஊடாக இது குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

