Wednesday, December 10, 2025 1:52 pm
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் நோக்குடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை “அனர்த்த தகவல் மையம்” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 7 மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த மையம் செயல்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளை கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் ஒன்று திரட்டுவதே இதன் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்திற்குத் பாதிக்கப்பட்ட மக்கள் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ, நேரடியாகவோ தங்கள் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை தெரிவிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக 0759 570 570, 0761 660 570, 0705 699 110 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தகவல் மையத்துக்குக் கிடைக்கப்பெறும் இந்தத் தகவல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இந்த மையம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


