Saturday, November 8, 2025 10:28 am
2026 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது.
குறித்த வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகப், பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம், நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு இடம்பெறும். இதன் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை, நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். சுமார் 4 மணித்தியாலங்களுக்கு மேல், ஜனாதிபதியால் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

