Friday, December 5, 2025 9:48 am
கொழும்பு ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் ஐந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குறித்த பகுதி பாதுகாப்பு அபாயத்தில் இருந்த நிலையில் அந்த பகுதியில் வசித்த குடும்பங்கள் இடைத் தங்கல் முகாம்களுக்கு மாற்றப்பட்டிருந்தது. வீடுகள் இடிந்து விழுந்ததனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. வீடுகள் மட்டுமே முழுமையாக சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கொழும்பு மாநகரசபை மேயர் விராய் கெலி பல்சதார், தொடர்புடைய பொறுப்பதிகாரிகள், வெரலகொட பொலீசார், தீயணைப்பு படையினர், மாநகர சபை ஊழியர்கள் என பலர் உடனடியாக களத்திற்கு சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அனர்த்தம் நடந்த பகுதியை ஆராய்ந்த மேயர், அடுத்தகட்டமாக எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கலாம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உடனடி உதவிகள், நீண்டகால பாதுகாப்பு வீட்டு திட்டங்கள் போன்ற விடயங்களில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்

