Wednesday, December 17, 2025 12:04 pm
நாட்டை தாக்கிய அனர்த்தம் காரணமாக 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலானவர்கள் எனவும் குறித்த மாவட்டத்தில் 21 சிறுவர்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே போன்று கண்டி மாவட்டத்தில் 20 சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோரை இழந்துள்ளனர்.
இதே நேரம் அனர்த்தம் காரணமாக பெற்றோரை இழந்த சிறுவர்கள் தொடர்பில் சட்டவிரோதமாக தகவல்களை திரட்டுவது மற்றும் கடத்தல் சம்பவங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்கள் வழியாக தொலைபேசி இலக்கங்களை பதிவிட்டு சிறுவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் அனர்த்தத்தினால் 35 சிறுவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

