Friday, December 5, 2025 12:39 pm
டித்வா புயல் வெள்ளப் பேரழிவினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவசர நிவாரணமாக, கனடா தனது ஆரம்ப கட்ட மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் கனடிய டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிதியுதவி தற்காலிக கூடாரங்கள், தூய்மையான குடிநீர், சுகாதார சேவைகள் மற்றும் பிற அத்தியாவசிய உதவிகள் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வழங்க பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது.
இலங்கையின் நிலைமை தொடர்பில் கனடா கவனித்து வருவதாகவும் தேவைகள் அதிகரிக்கும் போது தொடர்ந்தும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

