Friday, January 16, 2026 12:24 pm
மன்னார் – பேசாலை கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், நீரில் காணாமல்போன இளைஞனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நான்கு பேரும் நேற்று மாலை கடலில் நீராடுவதற்காக சென்றுள்ளனர். நீராடச் சென்றவர்களில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில், ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காணாமல்போயிருந்த இளைஞனின் சடலம் கரை ஒதுங்கி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் 16 முதல் 18 வயதுடைய பேசாலை, வசந்தபுரம், உதயபுரம் கிராமங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

