Thursday, October 30, 2025 4:04 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் இந்தியாவை சேர்ந்த அனில்குமார் பொல்லா என்ற 29 வயது இளைஞன் 240 கோடி இந்திய ரூபாய்களை வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்றுமதி தொழில் செய்து வரும் அவர் 23ஆவது அதிஷ்ட நாள் குலுக்கலில் ஏழு வெற்றி எண்களும் பொருந்தியதால் முழு பரிசுத் தொகையையும் வென்றுள்ளார்.
இந்த லாட்டரி வரலாற்றிலேயே இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை என குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 88 இலட்சம் போட்டியாளர்களில் அனில்குமார் பொல்லா ஒரு வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

