Tuesday, January 13, 2026 12:43 pm
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபன்ன நுழைவு பகுதிகளுக்கு இடையில் இன்று செவ்வாய்கிழமை காலை லொறி ஒன்றும் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து காரணமாக அந்த நேரத்தில் மாத்தறை நோக்கிய பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

