Monday, December 8, 2025 1:24 pm
காசாவில் யுத்தம் நடைபெறும் நிலையில் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் இடம்பெற்ற ஐம்பத்து நான்கு ஜோடிகளின் திருமணம் வைரலாகி வருகின்றது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசாவில் 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரினால் ஏற்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாஸ்தீனர்கள் பலியானதுடன், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பட்டினிச்சாவும் துயரத்தை ஏற்படுத்தி இருந்தது.
காசா மீதான போரில் சமார் 70,360 பேர் உயிரிழந்த நிலையில் 171,047 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும் 373 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் காசாவில் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் ஐம்பத்து நான்கு ஜோடிகளுக்கு இடம்பெற்ற திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.



