ஹைதராபாத்தில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் சன் ரைசஸ் ஹைதராபாத்.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஹைதராபாத் முதலில் துடுபெடுத்தாடி 6 விக்கெற்களை இழந்து 286 ஓட்டங்கள் எடுத்தது.
287 எனும் இமாலய இகக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து 242 ஓட்டங்கள் எடுத்தது.ஹைதராபாத் 44 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே இஷான் கிசான் சதத்தை அடித்தார். 47 பந்துகளில் ஆட்டமிழக்காது 106* ஓட்டங்கள் அடித்தார். டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் 67 ஓட்டங்களும், ஹென்றிச் க்ளாஸென் 14 பந்துகளில் 34 ஓட்டங்களும், நிதிஷ் ரெட்டி 15 பந்துகளில் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
4 ஓவர்களில் 76 ஓட்டங்களிக் கொடுத்து ஆச்சார் வெறுப்பேற்றினார்.
தேஷ்பாண்டே, 3, தீக்சனா 2 விக்கெற்களை எடுத்தனர். ராஜஸ்தானுக்கு வீரர்களான ஜெய்ஸ்வால் 1, கப்டன் ரியான் பராக் 4 நிதீஷ் ராணா 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரேல் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 11 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சாம்சன் 66 (37) ஜுரேல் 70 ஓட்டங்கள் எடுத்தனர். சிம்ரோன் ஹெட்மயர் முடிந்தளவுக்கு அதிரடியாக போராடி 42 , சுபம் துபே 34* (11) ஓட்டங்கள் எடுத்தனர். 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்த ராஜஸ்தான் 242 ஓட்டங்கள் எடுத்தது.இஷான் கிஷான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்தப் போட்டியையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் 4 முறை 250க்கும் மேற்பட்ட குவித்து சாதனை படைத்தது. (287/3, 286/6, 277/3, 266/7) குவித்துள்ளது. இதன் வாயிலாக ரி20 கிரிக்கெட்டில் அதிக முறை 250 ஓட்டங்கள் அடித்த அணி என்ற உலக சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது. இதற்கு முன் இந்திய அணி,இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே ஆகியன தலா 3 முறை 250+ ஓட்டங் கள் அடித்ததே முந்தைய சாதனை.
Trending
- ட்ரம்ப் வரிகளை இடைநிறுத்தியதை அடுத்து அமெரிக்க பங்குகள் உயர்ந்தன
- உலகின் நீளமான நாக்கு கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்
- ஏப்ரல் 15 ஆம் திகதி அரசு விடுமுறையா?
- தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அதிரடி
- இந்தியா மீண்டும் நில இணைப்பை முன்மொழிகிறது, ஆனால் இலங்கை இன்னும் உறுதியளிக்கவில்லை
- ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தவர்களைப் பிடித்த கடற்படை
- மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை பெற்றுக்கொடுப்பதே இலக்காகும் – சுதர்சன
- நாபிர் பவுண்டேசனுடன் இணையும் அரசியல் கட்சி வேட்பாளர்கள்