ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கப்டனாக சூர்யகுமார் யாதவ் ச்யற்படுவார். முபை கப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒரு போட்டி தடை காரணமாக போட்டியில் இருந்து விலகுவார்.
2024 சீசனின் மும்பையின் கடைசிப் போட்டியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஹாரதிக் ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சீசனில் ஹார்திக்கின் மூன்றாவது தவறு இது என்பதால், அவருக்கு ரூ. 30 லட்சம் அபராதமும் ஒரு போட்டிக்கு தடையும் விதிக்கப்பட்டது, இது இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தில் அமுல்படுத்தப்படும்.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் விளையாடவில்லை என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முறையாகத் தகவல் அளித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மகேல ஜெயவர்தனே\ உறுதிப்படுத்தினார்.