மின்னேரியா தேசிய பூங்காவில் வசிக்கும் ‘யூனிகார்ன்’ என்ற பிரபலமான யானை, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிக்க படபெந்தி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யானை மார்ச் 15 ஆம் திகதி சுடப்பட்டிருக்கலாம் என்றும், அதன் சடலம் நேற்று அதிகாலையில் வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வனப் பாதுகாப்புத் துறை முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் டாக்டர் படபெண்டி தெரிவித்தார்.