இஸ்ரேல் , இலங்கை ஆகிய அரசாங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் மொத்தம் 6,160 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2025 முதல் மொத்தம் 1,082 இலங்கை இளைஞர்கள் இஸ்ரேலில் கட்டுமானத் துறை வேலைகளுக்காக ஏற்கனவே புறப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 41 பேருக்கு நேற்று (10) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்கவின் தலைமையில் விமானப் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டன.