Saturday, March 8, 2025 12:57 am
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் ஆகியவற்றின் விபரத்தை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 03ஆம் திகதி ஆரம்பமான கட்டுப்பணம் பெறும் செயல்முறையின்படி, வியாழக்கிழமை மாலை 4.15 வரையிலான காலப்பகுதியில் 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளும் 38 சுயேட்சைக் குழுக்களும் அந்த 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

