இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை (27) உலக விவகாரங்கள் தொடர்பில் முக்கிய உரை நிகழ்த்துவதற்காக புதுடில்லிக்கு புறப்பட்டார்.
புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (28)இராஜதந்திரிகள் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் உரை நடைபெறும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் பேச உள்ளனர்.
விக்கிரமசிங்கவின் உரை தெற்காசியாவின் புவிசார் அரசியல் நிலப்பரப்பு, பொருளாதார சவால்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பாகக் கவனம் செலுத்தும்.
முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மோடியுடன் ரணில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து அவர்களின் சந்திப்பில் விவாதிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்கிரமசிங்க தனது விஜயத்தின் போது முக்கிய இந்திய வர்த்தக தலைவர்களையும் சந்திப்பார்.
Trending
- பண்டிகைக் கால விபத்துக்கள் – 80 பேர் வைத்தியசாலையில் அனுமதி
- குட் பேட் அக்லி தயாரிப்பாளரிடம் 5 கோடி ரூபா கேட்கிறார் இளையராஜா
- யாழில் தென்னை மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
- ட்ரம்பை எதிர்த்ததால் 2.2 பில்லியன் டொலர் இழப்பு
- அமெரிக்காவில் நிலநடுக்கம்
- சுழிபுரத்தில் புதுவருட விளையாட்டும் மாணவர் கௌரவிப்பும்
- முன்னாள் அமைச்சர் கைதாவார் சுமந்திரன்
- நல்லூரில் புது வருடப் பிறப்பு