Wednesday, February 26, 2025 10:54 am
ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவி வரும் மர்ம நோய் காரணமாக சில நாட்களில் 53 பேர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அங்கே காட்டுத்தீ போல இந்த இந்த மர்ம நோய் பரவி வருகிறது. இந்த நோயால் 431 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பெப்ரவரி 10 – 16-க்கான செய்தி அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு இந்த நோய் குறித்து எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.பாதிக்கும் மேற்பட்டோர் அறிகுறி தென்பட்ட 48 மணி நேரத்தில் மரணம் அடைந்துவிட்டதாக உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது. வவ்வால் கறி மூலம் இந்த நோய் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆம் சீனாவில் கொரோனா பரவ இதே காரணம் சொல்லப்பட்டது. இப்போது காங்கோவிலும் இதே காரணம் சொல்லப்படுகிறது.அங்கே வவ்வால் கறி சாப்பிட்ட 3 சிறுவர்களிடம் முதலில் இந்த நோய் கண்டறியப்பட்டதால், அவர்களிடமிருந்தே பிறருக்கு பரவியதாக சந்தேகம் எழும்பி உள்ளது. . ஒருவருக்கு இந்த நோய் ஏற்பட்டால்.. அடுத்த 48 மணி நேரத்தில் அவர்கள் மரணம் அடைந்து விடுகின்றனர். WHO ஆப்பிரிக்க பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, மூன்று சிறுவர் வொவ்வால் கரி சாப்பிட்டு 48 மணி நேரத்திற்குள் ரத்தக்கசிவு காய்ச்சல் ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நெருக்கமாக இருந்தவர்கள், அவர்களின் காண்டாக்ட் ஆகியோருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. போலோகா என்று பகுதியில் இந்த நோய் பரவி உள்ளது.
அதன்பின் அருகில் உள்ள போர்னேட் பகுதியில் 13 பேருக்கு நோய் ஏற்பட்டது. இப்போது 400 பேருக்கும் அதிகானோர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

