இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதைத் தடுப்பதற்கு இந்திய மத்திய அரசும், தமிழக அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார்.
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே, மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (25 ) சென்றபோது அவர் இந்தக் கோரிக்கையை முன்வத்தார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர் விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அணுகுகின்றது எனவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சருக்கும், பிரதி உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், கலாசார மற்றும் பொருளாதார உறவுகள் பற்றி பேசப்பட்டாலும் மீனவர் பிரச்சினை சம்பந்தமாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது இந்திய மீனவர்களின் இழுவை படகு உட்பட சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் வடக்கு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இலங்கையின் கடல்வளத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி அமைச்சர் எடுத்துரைத்தார்.
இலங்கை கடற்பரப்புக்குள் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது. மீனவர் பிரச்சினையை மனிதாபிமான ரீதியிலேயே அணுக வேண்டும் என இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கூறினார்.
இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் பற்றியும் அவர்கள் இருவரும் கல்ந்துரையாடினர்.
Trending
- வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் கையளிப்பு
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் கைது
- கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு
- புது வருட விபத்தில் 80 பேர் பாதிப்பு
- சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பொலிஸில் புகார்
- போயிங்கிடம் இருந்து விமானங்கள் வாங்கக் கூடாது சீன அரசு உத்தரவு
- உலகில் முதல்முறையாக விந்தணு ஓட்டப் பந்தயம்
- சோனியா, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்