Tuesday, February 25, 2025 8:48 am
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியும், அதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியும் வரவு செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்த பின்னரே அறிவிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பட்ஜெட் விவாதத்திற்குப் பிறகு வேட்புமனுக்களைக் கோர வேண்டும் என வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த பதில் வெளியாகி உள்ளது.
தேசிய வரவு செலவுத் திட்டம் அல்லது அரசியல் அழுத்தம் போன்ற காரணிகளின் வெளிப்புற செல்வாக்கு அல்லது தடங்கல்கள் இன்றி, ஆணைக்குழு சுயாதீனமாக உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து தனது முடிவை எடுக்கும் என்று ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க ரத்நாயக்க கூறினார்.

