Monday, February 24, 2025 12:36 am
மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் ஆபத்தான நிலையில் இருப்பதாக வத்திகான் சனிக்கிழமை ( 22) தெரிவித்துள்ளது.
நிமோனியா,சிக்கலான நுரையீரல் தொற்று காரணமாக ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 88 வயதான போப்பாண்டவர், இரத்த சோகையுடன் தொடர்புடைய குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை காரணமாக இரத்த மாற்றத்திற்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
பிரான்சிஸிற்கு சிறப்பான சிகிச்சை வழங்கி வந்தாலும், அவர் இன்னும் குறிப்பிடத்தக்க ஆபத்தில் இருப்பதாகவும், ஆபத்தான இரத்த தொற்றுநோயான செப்சிஸ் உள்ளது கவலையளிக்கும் விஷயமாக உள்ளதாகவும் ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையின் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

