Monday, February 17, 2025 11:59 pm
மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இன்று உத்தியோக பூர்வ விஜயமாக இலங்கைகு வருகிறார்.
பெப்ரவரி 21 ஆம் திகதி வரை இலங்கையில் இருக்கும் அவர்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.
மாலைத்தீவு வெளியுறவு அமைச்சரும், அவரது குழுவினரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்துடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர்.
வெளியுறவு அமைச்சர் கலீலுடன் மாலைத்தீவுகளின் வெளியுறவுச் செயலாளர் பாத்திமத் இனாயாவும் வருகைதரவுள்ளார்.