Thursday, February 13, 2025 12:34 am
நடிகர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்க உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைமை எடுத்த இந்த முடிவை கமலிடம் நேரில் தெரிவிக்க திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவரும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு, அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்தார் எனவும் செய்திகள் கூறுகின்றன. எனினும் அதில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே குறிப்பிட்டது.
இன்னும் சில மாதங்களில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களான- என். சந்திரசேகரன்(அதிமுக), அன்புமணி ராமதாஸ்(பாமக), எம். சண்முகம், வைகோ, பி. வில்சன், , எம். முகமது அப்துல்லா (திமுக) ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

