உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்ததால் நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் , பொருளாதார மேம்பாட்டு அமைச்சு மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்களின் விவரங்கள் பின்வருமாறு.
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பதில் அமைச்சர் – டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன
பதில் பாதுகாப்பு அமைச்சர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பதில் அமைச்சர் – தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் – வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு