ஐக்கிய அரபுகள் இராஜியத்தில் நடைபெறும் உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்கஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (10) பயணமானார்.
இந்த விஜயத்தின் போது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்க உள்ளார்.
மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்படும்.
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத்துறைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் பல தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார்.
Trending
- இளைஞன் உயிரிழப்பு தொடர்பில் வெலிக்கடை பொறுப்பதிகாரி பணிநீக்கம்
- இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார்
- ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் அநுராதபுர ரயில் வீதிகள் திறந்து வைப்பு
- தெற்கு , மேற்குஅமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம்; 16 பேர் பலி
- பேயர்ன் முனிச் கிளப்பை விட்டு வெளியேறினா தாமஸ் முல்லர்
- திடீர் மாரடைப்பால் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்
- புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை காட்சிப்படுத்த மோடி வேண்டுகோள்
- சஜித் கொடுத்த சிறுத்தையின் கதை