Saturday, February 8, 2025 2:08 pm
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை 90 ஆயிரத்து 629 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தனது கட்டுப்பணத்தை இழந்தார். மற்ற 44 வேட்பாளர்களின் கட்டுப்பணமும் பறிபோயின.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

