நடிகர் அஜித் , திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் கொண்டாட்டத்துடன் ரிலீசாகியுள்ளது விடாமுயற்சி படம். இரண்டு ஆண்டுகளாக அஜித் பட ரிலீசுக்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை இந்தப் படம் கொடுத்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துவரும் நிலையிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை நிறுத்த முதற்போது தன்னுடைய கார் ரேஸிங்கிற்காக துபாயில் உள்ளார் அஜித்குமார். இதனிடையே இன்றைய தினம் ரிலீசாகியுள்ள விடாமுயற்சி படத்தை திரிஷா, ஆரவ் உள்ளிட்ட படத்தின் நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் திரையரங்குகளில் சென்று ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்துள்ளனர்.நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ரசிகர்களின் காத்திருப்பிற்கு பிறகு தற்போது விடாமுயற்சி படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாகியுள்ளார் திரிஷா. இவர்களின் காம்பினேஷன் படத்திற்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. ரோட் டிராவலை மையமாக கொண்டு வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் படம் வெளியாகியுள்ளது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு